Thursday, December 6, 2007

நினைவுகள்



நீ இல்லாத இரவுகள்
நிலவற்ற அமாவாசையாய்..
உன் நினைவுகளற்ற தருணங்கள்
சூரியன் தொலைந்த
பகல் பொழுதாய்...

1 comment:

kaarthikmani said...

நண்பா...
இதோ-
உனக்காக என் கவிதை!

உன் காதலிக்கு,
கவிதையை மட்டுமே
பரிசளித்துக் கொண்டிருந்தால்...
உன் காதலை
பரிசளிப்பது எப்போது?

உன் கனவுகளில்
கவிதை வரைந்தால்,
அது
அவளுக்குத் தெரியுமா?

நெடுந்தூரம் அவளுடன்
பயணம் செய்யத்தான்
கிளம்பினாய்...

ஆனால் - இடையில்

கவிதையின்
இளம் சூட்டிலேயே
தங்கி விட்டாய் போலும்!

நிரந்தரம் தேடி
நெடுந்தூரம் சென்றவன்
தற்செயலாய்
கவிதையின் நிழலில் ஒதுங்க...
அங்கேயே
வீடு கட்டி
குடிகொண்டு விட்டாய் போலும்!

உன் கவிதை
உரை வாளாய் இருக்கத்தான்
பாரதி அழைத்தான்.

ஆனால்,
உன் கவிதைகள்
காதலெனும் சிற்றின்ப-
இறகுகளின் அடியில்
முதுகு சொறிவதேனோ?

ஆனாலும்
அசதி உள்ள மட்டும்
வசதி உனக்கில்லை!

அந்த இமையத்தையே
புரட்டிப் போடு,
உன் கவிதைகளால்!

ஆனால்,
காதலால் மட்டுமே
உருளுவதேனோ?
உருகுவதேனோ?

அந்த சித்திர குப்தனின்
தலையெழுத்தையே
எழுத வல்லவன் நீ!
உன் தலையெழுத்தாய்
காதலியின் மறுப்பை
எண்ணியா வேதனைப்படுவது?

வெளியே வா
வித்தகக் கவியே...
உலகம் விரிந்து கிடக்கு!!!

தாய் மடியின் ஈரம் தெரியலையா?
தாய் நாட்டின் வீரம் புரியலையா?

எது உன்னைத் தடுக்கிறது?

(இன்னும் நிறைய இருக்கு. ஆனால் என் நேரம் போதாமையால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.)