Thursday, December 27, 2007

உன் பொய் விமர்சனம்

ஐயப்பனுக்கு
வெட்டிய கெடா போல்,
உன்னிடம் என் கவிதைகள்.

நீ ரசிக்கவில்லை
நான் கவிஞனில்லை
மீண்டும் ரசிகன் ஆகிறேன்,
உன் பொய் விமர்சனங்கள்
கவிதையாய்...

Wednesday, December 26, 2007

கனா

தமிழா!!
உனக்கு
கனவுகள் காணும்
சுதந்திரம் இருக்கு,
ஆனால் மறந்துவிடாதே
அதை நிஜமாக்கும்
ஆற்றல்
கனா கண்டவனுக்கே
உரியது..

ரசிகன்

கதை கவிதை
கவிஞன்
என்றிருந்தேன்
ஏனோ, காதல்
வசப்பட்டப்பின்
ரசிப்பதற்கு மட்டுமே
முடிகிறது.

காயம்

முட்கள்
காயபடுத்தினால்
வலிகள் தரும்
மலர்கள்
காயப்படுத்தினால்???
என்னவளே
ஆகிவிடாதே
உயிர்கொல்லி...

கனவுகள்

விடிய விடிய
உணர்ந்த
சுகங்கள், சுமைகள்
விடிந்ததும்
நினைவில் இல்லை..
-கனவுகள்...

Tuesday, December 25, 2007

கடித்தும் உடையாத
கல்கோனாவாய்
இருந்த நான்
இன்று
உன் சுவாசத்திற்கே
கரைகிறேன்
சூடமாய்

Sunday, December 23, 2007

செருப்பு

காதல் இல்லை
நட்புமில்லை
ஊதியமுமில்லை
மரியாதையுமில்லை
இருந்தும் உன் கால் அடியில்
மடிந்து கிடப்பேன்,
- செருப்பு...