எங்கும் உன் வாசம் !!
தூக்கம் தொலைத்த இரவுகளில்
நீளும் உந்தன் நினைவுகள்…
தூங்கி தொலைத்த இரவுகளில்
துரத்தும் உந்தன் கனவுகள்...
விடிந்தும் உன்னையே தேடுகிறேன்
கனவினை மீட்க முயல்கிறேன்…
கனவு மறந்த போதிலும்
கனவின் தாக்கம் விட்டு போகலை…
கனவை கலைத்து,
நினைவை கோர்க்கிறேன்,
எங்கும் உன் வாசம் உணர்கிறேன்…
முன்னும் பின்னும் யாரடி..
என்னை சுற்றிலும் நீயடி…!!!

1 comment:
Nice lines :)
Post a Comment