
காலை பத்து மணி
தூக்கம் விழிக்கையில்
புரிந்தது நேற்று
வாங்கிய Time piece-n
மலிவு விலை காரணம்.
தண்ணீரில் கலந்த பாலை
பருகும் போதுதான்
உணர்ந்தேன் '300 ml extra'
முதல்முறை உடுத்தும் போது
கையோடு வந்த பொத்தான்கள்
உணர்த்தியது 'End of season sale'
நாளின் தொடக்கத்திலே
கிடைத்த ஏமாற்றத்துடன்
வீட்டை விட்டு வெளியேறும் போது.
நேற்றிறவு பெய்த மழையில்
பாதம் நனைந்தது
மனம் குழம்பியது
இந்த கலிகாலத்திலும்
மழை பெய்கிறதா??
வாசலில் கிடந்த
நாளிதழை, யாரோ
பத்திரப்படுத்தி வைத்திருந்தபோதுதான்
உணர்ந்தேன் 'இன்னும் நல்லவர்கள்
உயிருற்று இருக்கிறார்கள்'
மீண்டும் மழை பெய்ய தொடங்குகிறது...