
யார் சொன்னது
இதயம் கைபிடி அளவென்று
என் இதயம் 5 அடி உயரம்...

என் வார்த்தையில்
உன் இதழ் நினைந்தது
முத்தம்...

என் முதல் கவிதை
முதல் அரங்கேற்றம்
உன் உதட்டில்
புன்னகை...
மின்தடையில் வகுப்பறை
விசிரியாய் புத்தகங்கள்
தென்றலாய் உன் பார்வை
மேலும் வியர்த்தது ...
கடை கடையாய்
valentine card
தேர்ந்தெடுத்தும்,
பளிச்சென்று
என் காதலை சொன்னது
Black board கிறுக்கள்கள்...
நிழல் தேடிஒடி வந்தேன்,
தண்ணீர் தந்து
தாகம்மூட்டினாய்...
காமம்.
பரிக்கப்பட்டபூக்கள்,
கிரீடத்தில்....
காம்பாக
நான்,
குப்பையில்....