Monday, September 22, 2008

மன்னிப்பாயா


நிசப்தமான தனிமை
மயானபூமியாய் சலனமற்றிறுக்க
இனிமையான நினைவுகள்
என்றாலும், நீ என்னிடம்
இல்லாததை உண்ர்த்தும்
விஷபோதையாய் உயிர்வதைக்கின்ற்ன.

நினைவுகள் உயிர்கொல்லி
ஆகாமலிருக்க, மீண்டும்
ஆராவார கூட்டத்தினுள்
ஐக்கியமாகிறேன்.
மன்னிப்பாயா?

போதை தெளிய
விஷம் மட்டும்
ஏறுகிறது, குற்றஉணர்வாய்.....

Monday, August 25, 2008

தனிமையில்


"எனக்கென்று ஓர் உயிர்
இத்தருனம் இல்லாத போதும்
உயிர் மாய்க்க மறுத்ததின்
காரணம்
என்றேனும், எவனோ ஒருவனுக்கு
துணை நிற்பேன் என்ற
நம்பிக்கையில்..."
கவிதை படைக்க எண்ணி
கவி நயம் ஏற்றாமல்
உணர்வுகள் மட்டும்
வார்த்தைகளாய் !
தனிமையில்,
என்னை போல...

Wednesday, May 21, 2008

எங்கேயோ ஒலிக்கும் இசை

காற்றில் கசிந்து

என் காதுகளில் இன்பம் சேர்பதுபோல்

அவன் கைகளில் பினைந்திருந்தும்

என்னிடம் புன்னகைக்கிறாள்

நன்பனின் காதலி. .

Monday, March 24, 2008


'நீ பூச்சூடுவதில்லை என்றே
உலகின் அத்தனை பூக்களூம்
ஒற்றை நாளில் மடிகின்றன.., உனக்காக'
என்றேன்,
'ஒற்றை பூ மட்டூம்
வாடாமல் 20 வருடம் காத்திருக்கிறது, உனக்காக'
என்பது போல் விசும்பல் தந்தாய்

Friday, February 22, 2008

அமுதம்

நீ உண்ட மிச்சத்தை
அமுதம் என்றேன்
ஆனால் இன்று மிச்சம் இல்லா
அத்தனையும் நஞ்சாய் உணர்கிறேன். . .

கண்ணீர்

ஏனோ அன்று, கண்ணீர் விட்ட
தடங்களை, முத்தமிட்டு அழித்தாய்
ஆனால் இன்று, உன் முத்தத் தடங்களை
கண்ணீர் விட்டு அழிக்கிறேன். . . .

Thursday, January 3, 2008

வெற்றிடம்

கற்று அறிந்தேன்
வெற்றிடம்
வின்வெளியில்,

இன்று உணர்ந்தேன்
வெற்றிடம்
ஏழையின் வயிற்றில்.